
தேவையானவை:
செளசெள – 2, உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன், கடலைப் பருப்பு – 4 ஸ்பூன், மிளகாய் வற்றல் – 5, பெருங்காயப்பொடி – 1 ஸ்பூன், புளி – ஒரு சிறு உருண்டை, எண்ணெய், உப்பு – தேவையானது.
செய்முறை:
செளசெளவைச் சிறிசிறு துண்டுகளாக்கி வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, உப்பு சேர்த்து வதக்கியபின் அரைக்க வேண்டும்.