சமைக்க… சுவைக்க… சூப்பர் ரெசிபிஸ்!

சமைக்க… சுவைக்க… சூப்பர் ரெசிபிஸ்!

தர்ப்பூசணிக் குழிப்பணியாரம்

தேவை: புழுங்கலரிசி - 1 கப், தேங்காய்த் துருவல் – 1/4 கப், துவரம்பருப்பு - 1/4 கப், மிளகாய் வற்றல் - 2, நறுக்கிய தர்ப்பூசணித் துண்டுகள் - 1 கப், கறிவேப்பிலை - 1 பிடி, கொத்துமல்லித் தழை - 1 கைப்பிடி, எண்ணெய்,        உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை : புழுங்கலரிசி, துவரம் பருப்பை ஊற வைத்து மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல், தர்ப்பூசணித் துண்டுகளைச் சேர்த்து அரைக்கவும். உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் விட்டுக் காய்ந்தபின் அரைத்த மாவைக் கரண்டியால் ஊற்றி, சிம்மில் வேகவிட்டுத் திருப்பி மீண்டும் வேகவிடவும். சுவையான தர்ப் பூசணிக் குழிப்பணி யாரம் தயார். தர்ப் பூசணியில் நீர்ச்சத்து உள்ளதால் அரிசியில் நீர்விட்டு அரைக்கக் கூடாது.

ஸ்பைஸி சாட்

தேவை: சப்பாத்தி - 5, வெங்காயம் - 2, கேரட் - 1, வேக வைத்த உருளைக்கிழங்கு - 1, நெய் அல்லது எண்ணெய் - சிறிதளவு, பேரீச்சம்பழம் - 1 கப், புளி, வெல்லம் - தலா 1/4 கப், வறுத்த சீரகத் தூள், சாட் மசாலா - தலா 1 சிட்டிகை, கறுப்பு உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு, கொத்துமல்லித் தழை - சிறிதளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டை  வெந்நீரில் போட்டுத்  தோல் சீவி, துருவவும். வேகவைத்த உருளைக்கிழங்கை மசிக்கவும். சப்பாத்தியைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். இனிப்புச் சட்னிக்கு, பேரீச்சம்பழத்தை அரை மணி நேரம் வெந்நீரில் ஊறவிட்டு அத்துடன் புளி, வெல்லம், வறுத்த சீரகத்தூள், கறுப்பு உப்பு போட்டு விழுதாக அரைக்கவும். வாயகன்ற பாத்திரத்தில் சப்பாத்தித் துண்டுகளைப் போட்டு அதனுடன் உருளைக்கிழங்கு,  கேரட்,  வெங்காயம் மற்றும் இனிப்புச் சட்னியைப் பரவலாகப் போடவும். அதன்மேல் 1 டீஸ்பூன் சாட் மசாலா,  காரத்துக்கு ஏற்ப மிளகாய்த் தூள் சேர்க்கவும்.   கடைசியாக கொத்துமல்லித் தழை தூவிப்  பரிமாறவும்.

உருளை ஓமப்பொடி

தேவை:  உருளைக்கிழங்கு – 1/2 கிலோ, மைதா மாவு - 4 டீஸ்பூன், ஓமம் – 11/2 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை : உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். இத்துடன் ஓமம், வெண்ணெய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் ஓமப் பொடி அச்சில் பிசைந்து வைத்துள்ள கலவையை நிரப்பவும். அடுப்பை சிம்மில் வைத்து ஓமப் பொடியை எண்ணெயில் பிழிந்தெடுக்கவும். டூர் போகும்போது கொண்டு செல்ல ஏற்றது. வயிற்றுக் கோளாறுகளும் ஏற்படாது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com