சோள மாவு முறுக்கு!

சோள மாவு முறுக்கு!

தேவையான பொருட்கள்:

மக்காச்சோள மாவு :1கப்

திணை மாவு -1கப்

பச்சரிசி மாவு-2 கப்

பொரித்த புழுங்கல் அரிசி -1/2கப்

வறுத்த உளுத்தம் பருப்பு-2 டேபிள் ஸ்பூன் 

வறுத்து தோல் எடுத்த வேர்க்கடலை-2 டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை -ரெண்டு டேபிள் ஸ்பூன்

பெருங்காயப்பொடி -அரை டீஸ்பூன்

எள்-1டீஸ்பூன்

ஓமம்-1டீஸ்பூன்

எண்ணெய், உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

பொரித்த புழுங்கல் அரிசியுடன் பருப்பு வகைகளை சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடிக்கவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் பச்சரிசி மாவை நன்றாக வறுக்கவும். வறுத்தமாவில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய், உப்பு, பெருங்காயப்பொடி, எள், ஓமம் புழுங்கல் அரிசியுடன் அரைத்தவை அனைத்தையும் சேர்த்து கிளறவும். பின்னர் சோள மாவு, திணை மாவு போன்றவற்றையும்  இதனுடன் நன்றாக கலக்கவும். 

ஒரு பாத்திரத்தில் இந்த மாவை கொஞ்சமாக எடுத்து தண்ணீர் விட்டு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்குகளாக பிழிந்து நன்கு வேக விட்டு திருப்பிப் போட்டு எடுத்து வைக்கவும் . இந்த முறுக்கு பார்க்க அழகாக இருப்பதுடன், வாயில் போட்டால்  சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். நல்ல கிரிஸ்பியுடன் அப்படி ஒரு ருசி. 

விருப்பப்பட்டால் தண்ணீருக்கு பதில் தேங்காய் பால் விட்டு பிசைந்தும் செய்யலாம். அசத்தலான ருசியுடன் வாயில் போட்டால் கரையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com