Crispy பட்டணம் பக்கோடா!

Crispy பட்டணம் பக்கோடா!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு ஒரு கப் 

அரிசி மாவு 1/2கப்

வெங்காயம் 2 

பச்சை மிளகாய் 1

நறுக்கிய இஞ்சி  சிறிது

கருவேப்பிலை சிறிது 

கொத்தமல்லி  சிறிது

சோம்பு 1 ஸ்பூன் 

உப்பு 

மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்

பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

எண்ணெய் பொரிக்க…

ரு அகலமான பாத்திரத்தில் முதலில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தேவையான உப்பும் போட்டு கையால் நன்கு கலந்து விடவும். இவ்வாறு கலக்கும் போது வெங்காயமும் உப்பும் சேர்ந்து தண்ணீர் விட்டுக் கொள்ளும் இப்போது கடலை மாவு, அரிசி மாவு, சோம்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், விருப்பப்பட்டால் பேக்கிங் பவுடர் சிறிது சேர்த்து நன்கு பிசையவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் 4 ஸ்பூன் எண்ணெயை பிசைந்து வைத்துள்ள மாவில் விட்டு சிறிது நீர் தெளித்து பிசைந்து சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் நான்கு நான்காக போட்டு பொரித்தெடுக்கவும். சுவையில் அசத்தலாக இருக்கும் இந்த பட்டணம் பக்கோடாவை டீ, காப்பியுடன் மாலை நேரத்தில் சாப்பிட அசத்தலாக இருக்கும்.பத்தே நிமிடத்தில் செய்து விடக் கூடியது. வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே ஸாப்டாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com