கருவேப்பிலை ஊறுகாய்!

கருவேப்பிலை ஊறுகாய்!

-சௌமியா சுப்ரமணியன்.

தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை - 5 கப் 

கடுகு - 2 டீஸ்பூன் 

வெந்தயம் - 1 டீஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன் 

எண்ணெய் - 2

கப்புளி - 1/4 கப்

மிளகாய் தூள் - 1/2கப்

உப்பு - தேவையான அளவு

க.பருப்பு - 1ஸ்பூன்

ஜீரகம் - 1 ஸ்பூன்

நாட்டு சர்க்கரை - 2 ஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை :

வாணலியை அடுப்பில் வைத்த சூடானதும்கடுகு, வெந்தயம், தனியா போட்டு நன்றாக வறுக்கவும். கடுகு பிடித்து வெள்ளையாக மாறும் அளவிற்கு வறுக்கவும் இல்லை எனில் ஊறுகாய் கசக்கும். இதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் என்னை ஊற்றி கறிவேப்பிலை அதில் போட்டு நன்றாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.வாணலியில் புளியை போட்டு நன்றாக வதக்கவும்.இப்பொழுது வருத்த அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக நன்றாக அரைக்கவும்.

மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, ஜீரகம் தாளித்து நாட்டு சர்க்கரை , பெருங்காயம் சேர்த்து நன்றாக கிறளி ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும். இதனை சாதத்திற்கும் சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். சத்தான சுவையான ஊறுகாய் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com