சுவையான சூடான காளான் சமோசா!

காளான் சமோசா!
காளான் சமோசா!

தேவையான பொருட்கள்:

 மைதா மாவு - 1 1/2 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

சமோசா ஸ்டப்பிங் செய்ய தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது

பட்டன் காளான் - 300 கிராம் நறுக்கியது  

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி இலை - 1/2 டேபிள் ஸ்பூன் நறுக்கியது 

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

 முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான், பச்சை மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளானை நன்கு வதக்க வேண்டும்.

காளான் சமோசா!
காளான் சமோசா!

பின்னர் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி, ஆறவைத்து, பின்பு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி, ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் தயாரித்து வைத்துள்ள காளான் மசாலாவை வைத்து மூடி வைக்கவேண்டும்.

ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவை மிகுந்த காளான் சமோசா தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com