
தேவையான பொருட்கள் :
வறுத்த பச்சைஅரிசி இடியாப்பமாவு ஒருகப்
வறுத்ததினை மாவு கால்கப்
கருப்பட்டி 250 கிலோ
தேங்காய் கால்பாகம்
வறுத்தபாசிபருப்பு ஒரு கைப்பிடி
செய்முறை :
தினையை வறுத்து பொடி பண்ணிவைக்கவும் தேங்காயை பொடியாக நறுக்கி வைக்கவும். கருப்பட்டியை தட்டி வைக்கவும் பின் கருப்பட்டியை பாத்திரத்தில் போட்டு அரைலிட்டர் தண்ணீர் விட்டு காய்ச்சி வைககவும்.பின் வடிகட்டி கொள்ளவும் அரிசிமாவு. தினைமாவு. பாசிபருப்பு.தேங்காய்.சிறிது உப்பை சேர்த்து சூடானகருப்பட்டி பாகு ஊற்றி சாப்பாத்தி மாவு பாததிற்கு பிசையாவும்.இட்லி சட்டியில்நீர் விட்டு தட்டில் எண்ணெய் தடவி கொழுக்கட்டை மாவை சிறிது எடுத்து விரல்களுக்குள் வைத்து அழுத்தி பிடித்து இட்லி தட்டில் வைக்கவும். எல்லாமாவையும். கொழுக்கட்டை ஆக்கி இருபது நிமிடம் வேக வைத்து எடுக்கவும். தினை கருப்பட்டி பிடி கொழுக்கட்டை ரெடி.
Super Taste.
- பிரியதர்ஷிணி