சுவைமிகு வித்தியாசமான ரெசிபிஸ்!

சுவைமிகு வித்தியாசமான ரெசிபிஸ்!

ரெசிபி கார்னர்!

உருளைக்கிழங்கு லாலிபாப்

தேவை: உருளைக்கிழங்கு – 3 (மசித்தது), மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவைக்கேற்ப; வெங்காயம் – 2, சீரகம் – 1 ஸ்பூன், மக்காச் சோளமாவு – 1 டீஸ்பூன், பிரெட் தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை: உருளைக் கிழங்கை வேக வைத்து, மசித்துக்கொள்ளவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றையும் மற்றும் பச்சை மிளகாய், சீரகத்தையும் அரைத்து அதையும் சேர்க்கவும். இக்கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, அதை மக்காச் சோளமாவில் (தண்ணீர் ஊற்றிக் கலக்கியது) தோய்த்து, பிரெட் தூளில் பிரட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். உருண்டைகளை ஒரு குச்சியில் சொருகிப் பரிமாறவும்.

சட்பட் கார்னர்

தேவை: 200 கிராம் ஃப்ரெஷ் சோளத்தின் விதைகள்; ½ கப் சோள மாவு, ½ ஸ்பூன் மிளகுத்தூள், 2 பெரிய ஸ்பூன் அரிசி மாவு; பொரித்தெடுக்க எண்ணெய், தேவையான அளவு உப்பு, மிளகாயத்தூள்.

செய்முறை: சோள விதைகளை 2 நிமிடம் வேகவிட்டு, ஒரு டவலில் பரப்பவும். ஒரு பாத்திரத்தில் சோள மாவைப் போட்டு, உலர்ந்த மசாலாக்களைப் போட்டு, உப்பு போட்டுக் கலக்கவும். சோள விதைகளையும் கலந்து நன்றாகப் பிசையவும். பின் எண்ணெயை நன்றாகச் சூடு பண்ணி, சிறிது சிறிதாகப் போட்டுப் பொரித்தெடுத்து பரிமாறவும். இது ஒரு ஹெல்த் ஸ்னாக்ஸ்.

கோஸ் – கேரட் ஹெல்த்தி போண்டோ

தேவை: பொடியாக துருவிய முட்டைக்கோஸ் – 1 கப், பொடியாக துருவிய கேரட் – ½ கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1, பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 துண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, சீரகம், மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள் – தலா ½ ஸ்பூன்,  கோதுமை மாவு – ½ கப், கார்ன் ஃப்ளோர் மாவு – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – ½ ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பொரிப்பதற்கு எண்ணெய்.

செய்முறை: எண்ணெயைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பிசையவும். தண்ணீர் தேவையில்லை. பிசைந்த மாவை உருண்டையாக போண்டோ போல் கையில் எடுத்து, காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, எண்ணெயை வடித்து எடுக்கவும். இது சுவையான மொறு மொறுப்பான ஹெல்த்தியான ஸ்னாக்ஸ்.

சைனீஸ் பனீர் ரோல்

தேவை: மைதா மாவு – 200 கிராம், உப்பு – தேவையான அளவு, உருளைக்கிழங்கு – 2, அஜினமோட்டோ – ½ டீஸ்பூன், மிளகுத் தூள் – 1 டீஸ்பூன், தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதனுடன் உப்பு, மிளகுத்தூள், அஜினமோட்டோ எல்லாவற்றையும் சேர்த்துப் பிசையவும். இதை மைதா மாவுடன் சேர்த்து மறுபடியும் பிசைந்து பூரி போலத் திரட்டி இதன் உள்ளே மசாலாவை ஸ்டஃப் செய்து குறைவான எண்ணெயில் தவாவில் போட்டு வறுத்து எடுக்கவும்.

மசாலா செய்முறை: பனீர் துருவியது – 1 கப், உப்பு – தேவையான அளவு, அஜினமோட்டோ –
½ டீஸ்பூன், பெப்பர் – ½ டீஸ்பூன், எண்ணெய் – 100 மில்லி.

பனீரை நன்றாகத் துருவி அத்துடன் உப்பு, அஜினமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பனீர் மசாலா ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com