தீபாவளி ஸ்பெஷல் நெய்யப்பம் செய்யலாம் வாங்க! 

Diwali Special Neyyappam
Diwali Special Neyyappam
Deepavali 2023
Deepavali 2023

தீபாவளி நாட்களில் செய்யப்படும் பலகாரங்களில் மிகவும் பிரபலமான நெய்யப்பம் முற்றிலும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாகும். இந்த நெய்யப்பத்தை வீட்டிலேயே எப்படி ஆரோக்கியமாகவும், சுவையாகவும் செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு, அரிசி மாவு, நறுக்கிய தேங்காய், வெல்லம், ஏலக்காய் பொடி, எண்ணெய், நெய், வறுத்த எள், நன்கு பழுத்த வாழைப்பழம். 

செய்முறை:

முதலில் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துண்டுகளை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக வெல்லத்தை கம்பி பதத்திற்கு இல்லாமல் கொஞ்சம் இலகுவாக பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். 

பின்னர் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு கலந்த கலவையை ஒரு நிமிடத்திற்கு நிறம் மாறாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் வாழைப்பழம், நறுக்கிய தேங்காய் வெல்லப்பாகு சேர்த்து கலக்க வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 

இட்லி மாவு பதத்திற்கு மாவை தயார் செய்து அரை மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் பொடி வறுத்த எள், உப்பு சிறிதளவு போட்டு கிளறிவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உலர் கருப்பு திராட்சையில் உள்ளது ஓராயிரம் பலன்கள்!
Diwali Special Neyyappam

இறுதியாக பணியார சட்டியை அடுப்பில் வைத்து, அதன் குழிகளில் நெய் விட்டு நாம் கலந்து வைத்துள்ள மாவை அதில் ஊற்றி பொன்னிறமாக வரும்போது திருப்பி போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான ஆரோக்கியம் நிறைந்த நெய்யப்பம் தயார். இதை இந்த தீபாவளிக்கு செய்து அசத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com