ரெசிபி கார்னர்
முருங்கைக்காய் அல்வா!
தேவை:
முருங்கைக்காய் - 15
நெய் - ஒரு கப்
ஏலக்காய் தூள் - ஒரு ஸ்பூன் முந்திரி - ஆறு
குங்குமப்பூ- சிறிது
சர்க்கரை - முருங்கைக்காய் சதை அளவுக்கு இரண்டு பங்கு
செய்முறை:
முருங்கைக்காய்களை துண்டு துண்டாக நறுக்கி, முக்கால் பதம் வேகவைத்து, தோல், விதைகளை நீக்கவும். உட்புற சதையை வழித்து எடுத்து, நன்கு பிசைந்து மீண்டும் வேகவைத்து, கடைந்து வைக்கவும். அதற்கு இரண்டு பங்கு சர்க்கரையை கம்பி பதத்தில் காய்ச்சி, பிசைந்த முருங்கைக்காயைச் சேர்த்து கிளறவும். இரண்டும் இணைந்து இறுகி வரும்போது, நெய் சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப்பொடி, குங்குமப்பூ சேர்த்து தட்டில் கொட்டி, பரப்பி, ஆறியதும் வில்லைகள் போடவும். சுவையான, சத்தான முருங்கைக்காய் அல்வா ரெடி.