டூயல் பூரி
டூயல் பூரி

டூயல் பூரி!

தேவையான பொருட்கள்:

  • 2 கப் - கோதுமை மாவு

  • 2 - காரட்

  • 50 கிராம் - மல்லிதழை

  • 1 - பச்சைமிளகாய்

  • தேவையான அளவு - உப்பு

  • தேவையான அளவு - எண்ணெய்

செய்முறை:

1.மாவை இரு பங்காக பிரித்து கொள்ளவும்.உப்பு சேர்த்து பிசறி கொள்ளவும்.

2.காரட்டை துருவி உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி கொள்ளவும்.

3.மல்லிதழை, உப்பு ,பச்சைமிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி கொள்ளவும்.

4.இரு பங்காக பிரித்த மாவில் காரட், மல்லி சாறுகள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

5.பின்னர் வட்டமாக திரட்டி கொள்ளவும். சரிபாதியாக வெட்டி கொள்ளவும்.

6.பின்னர் இரு வண்ணங்களிலும் ஒரு பாதி எடுத்து ஒன்றாக ஒட்டிக் கொள்ளவும்.

7.எண்ணையை காய வைத்து பூரிகளாக சுட்டு எடுக்கவும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com