குழந்தைகளுக்கான மாலை நேர ஈசி ஸ்நாக்ஸ்!

மக்காச் சோள மசால் வடை!
தேவையான பொருள்:
மக்காச் சோளம் உதிர்த்தது – 2 கப்
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – கால் ஸ்பூன்
வற மிளகாய் – 4
வெங்காயம் – ஒன்று
புதினா – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உதிர்த்த சோள முத்துக்களுடன் தோல் சீவிய இஞ்சி, சீரகம், உப்பு, வற மிளகாய் சேர்த்து அடை மாவு பதத்தில் அரைக்கவும். அரைத்த மாவில் வெங்காயம், புதினா சேர்த்து, வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும். மொறு மொறு மக்காச் சோள மசால் வடைதயார்.
சேனைக்கிழங்கு கட்லட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 3 துண்டுகள்
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
கடலைமாவு - கால் கிலோ
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை - சிறிய அளவு
முந்திரிப்பருப்பு - 8
எண்ணெய் - பொரிக்க.
செய்முறை:
சேனைக்கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடலைமாவில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். அதில் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு கூடவே மசித்து வைத்த சேனைக்கிழங்கையும் போட்டு மசியலாக எடுத்துக் கொள்ளவும். அதில் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் தாளிக்க வைத்திருக்கும் பொருட்களை போட்டு முந்திரிப் பருப்பு போட்டு வதக்கவும். அதில் மசித்து வைத்திருக்கும் மசியலை போட்டு பின் அதில் கடலை மாவு கரைசலை சேர்த்து, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கடாயில் போட்டு நன்றாக கிளறவும். பின் அந்தக் கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆறியதும், சின்னச் சின்ன துண்டுகளாக போடவும். ஆறியதும், எண்ணையில் பொரிக்கவும். சுவையான சேனைக் கிழங்கு கட்லட் தயார்.