காக்சோ இனிப்புப் புட்டு!

காக்சோ இனிப்புப் புட்டு!

தேவையான பொருட்கள்:

ம்பு - 200 கிராம், கேழ்வரகு - 200 கிராம், சோளம்-200 கிராம், பயத்தம் பருப்பு - 100 கிராம், வெல்லம் - 300 கிராம், தேங்காய்த்துருவல் – அரை மூடி (சிறியது), பால் - 100 மி.லி., நெய் – 3 ஸ்பூன், ஏலக்காய் - 4, நிலக்கடலை - 1கைப்பிடி அளவு.

செய்முறை:

ம்பு, கேழ்வரகு, சோளம் இவற்றைக் கழுவி, கல் அரிந்து, சுத்தம் செய்து, தண்ணீரில் (தனித்தனியாக) மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்பு நீரை வடித்து, நிழலிலேயே உலர்த்தி, மூன்றையும், தனித்தனியாக பொரியும் வரை (கருகி விடாமல்) வறுத்து, மிக்ஸியில் நைசாக அரைத்து, நடுத்தர துளையுள்ள சல்லடையில் சலித்து, கப்பியை மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைத்து, சலித்து வரும் கப்பியைத் தனியாக  வைக்கவும். இதைப் புட்டு செய்வதற்கு, உபயோகப்படுத்த வேண்டாம்.

சலித்து எடுத்த, அந்த மூன்று மாவையும், ஒன்று சேர்த்து வேண்டும்.

பின்பு பயத்தம் பருப்பை, நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நீர் விடாமல், விழுதாக அரைத்து எடுத்து,  அந்த மூன்று தானிய மாவில் பயத்தம் பருப்பு விழுதைப் போட்டு, போதிய அளவு உப்புச் சேர்த்து, பால் தெளித்து தேங்காய் போட்டு (பிடித்தால் பிடிபட வேண்டும்) பக்குவமாகக் கிளறி, இட்லி கொப்பரையில், இட்லி தட்டை போட்டு,  அதன்மேல் இந்த மாவுக் கலவையை, துணியில் லூசாக முடிந்து வைத்து, நீராவியில், சுமார் முக்கால் மணி நேரம் வேகவைக்க வேண்டும். வெந்தவுடன் தாம்பாளத்தில் கொட்டி, சூட்டுடன், வெல்லம் பொடியாக்கியது, பொடித்த ஏலக்காய், வறுத்துப் பொடித்த வேர்க்கடலைப் பருப்பு, நெய் இவற்றைப் போட்டு, கிளறிக் கொடுத்து சாப்பிட வேண்டும். இது மிகவும் சத்துள்ளது ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com