இஞ்சி குழம்பு !!
பொதுவாக இஞ்சி மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை ஆகும். இஞ்சியை அப்படியே சாப்பிட இயலாதவர்கள் இஞ்சி குழம்பு செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
இஞ்சி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 15(நறுக்கியது)
பூண்டு பல் - 1
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - கால் கப்
தக்காளி - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - 3 கொத்து
செய்முறை :
இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு புளியை கரைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் இஞ்சியை போட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க வேண்டும்.
கடைசியாக மல்லி தூள் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.
மறுபடியும் வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
இதில் புளி தண்ணீர், அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து எண்ணெய் திரண்டதும் இறக்கி வைக்க வேண்டும்.
இப்போது சுவையான இஞ்சி குழம்பு தயார்.