கவுணி அரிசி இனிப்பு புட்டு!
தேவையான பொருட்கள்:
கவுணி அரிசி புட்டு மாவு -1கப்
வெல்லம் துருவியது -1 கப்
தேங்காய் துருவியது -1கப்
ஏலக்காய் - 4
கொட்டாங்கச்சி (மேல் பகுதி) - 1
நெய் - 3 ஸ்பூன்
உப்பு - சுவைக்காகசிறிது

செய்முறை:
கவுணி அரிசி புட்டு மாவுடன் துளி உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து அதில் துருவிய வெல்லம் , நெய் , ஏலக்காய் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும். கொட்டாங்கச்சியின் மேல் பகுதியில் உள்ள 3 கண் உள்ள இடத்தில் ஒரு துளையில் சிறிது ஓட்டை போடவும். அடியில் சிறிது துருவிய தேங்காய் அதன் மேல் புட்டு மாவு மீண்டும் தேங்காய் சேர்க்கவும்.
குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடவும் மேலே வெயிட் போடுமிடத்தில் இந்த மாவு நிரம்பிய கொட்டாங்கச்சியை வைத்து 3 -5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.வெந்தவுடன் தட்டில் கவிழ்த்து பரிமாறவும். வெல்லம் சேர்க்காமல் கடலைக்கறியுடனும் சாப்பிடலாம்.
மருத்துவ பயன்கள்:
புற்றுநோயை எதிர்த்து போராடும். மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும். கெட்ட கொழுப்புகளை கரைக்கக்கூடியது.
-லாவண்யா B