குஜராத் ஸ்பெஷல் சேவுசால்!

குஜராத் ஸ்பெஷல் சேவுசால்!

தேவையான பொருட்கள்:

  • எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்த பட்டாணி ஒரு கப்.

  • வேகவைத்த உருளைக்கிழங்கு...பரிமாறத் தேவையான அளவு.

  • அரைக்க

  • வெங்காயம் 2(medium சைஸ்)

  • தக்காளி 2

  • கிராம்பு 2 ,ஏலக்காய் 2,பட்டை சிறிதளவு.

  • மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்.

  • உப்பு தேவையான அளவு.

  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்.

  • தனியா தூள் ஒரு ஸ்பூன்

  • சீரகம் ஒரு ஸ்பூன்.

  • பிரியாணி இலை 2

  • எண்ணெய் தேவையான அளவு.

அலங்கரிக்க:

  • பொடியாக நறுக்கிய வெங்காயம்.

  • கொத்தமல்லி தழை,

  • இனிப்பு புளிப்பு சட்னி,டொமட்டோ சாஸ்.

  • மெல்லிய ஓமப்பொடி .சாட் மசாலா.

செய்முறை :

பட்டாணியை சிறிது உப்பு போட்டு வேக வைத்து தனியே வைக்கவும்.உருளைக் கிழங்கையும் வேகவைத்து தோல் உரித்து ஒன்றிரண்டாக உதிர்த்துக் கொள்ளவும்.

வெங்காயம்.தக்காளி மசாலா பொருட்களை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும்,சிறிது சீரகம் மசாலா பொருட்கள்,பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.

அதில் வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அது வதங்கியதும்,மிளகாய் தூள்,தனியா தூள் ,உப்பு சேர்க்கவும்.தேவை பட்டால் சீரக தூள் ம் சேர்த்துக் கொள்ளலாம்.

எண்ணெய் பிரிந்து வரும் போது,தக்காளி விழுது சேர்த்து நன்கு கலந்து விட்டு,தண்ணீர் சேர்த்து குழம்பு பதத்தில் கொதிக்க விடவும்.வேகவைத்த பட்டாணியை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் விதம்:

பரிமாறும் கிண்ணத்தில் பாதியளவு பட்டாணி மசாலா ஊற்றவும்.மேலே மசித்த உருளை கிழங்கை தூவவும்.அதை சுற்றிலும் இனிப்பு சட்னி,டொமட்டோ சாஸ் தேவை எனில் தயிர் விடவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தூவவும்.சாட் மசாலா ஒரு பின்ச் சேர்க்கவும்.எல்லாவற்றிற்கும் மேலாக ஓமப்பொடி தூவி அலங்கரிக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாவ் பன் டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com