கம்பு (pearl millet) சாலட்!

கம்பு (pearl millet) சாலட்!

தேவையான பொருட்கள்: கம்பு 100 கிராம், பொடிசா நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், கொத்தமல்லி தழை, துருவிய சீஸ்-தலா கால் கப், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: கம்பை நன்கு கழுவி தண்ணீரில் பத்து மணி நேரம் ஊற வைக்கவும். பின் நீரை வடித்து விட்டு, ஒரு காட்டன் துணியில் கம்பைக் கொட்டி, இருகக் கட்டி இருட்டான இடத்தில் வைத்துவிடவும். 24 மணி நேரம் கழித்து துணியை பிரிக்கவும். கம்பு நன்கு முளை விட்டு வந்திருக்கும். அதை ஒரு பாத்திரத்தில் போட்டு நறுக்கிய தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் அதன் மீது கொத்தமல்லி தழை, சீஸ் தூவி அலங்கரிக்கவும். சாலட் ரெடி.

கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த இந்த சாலடை உமிழ்நீருடன் கலந்து நன்கு மென்று சாப்பிட பலன் அதிகம் கிடைக்கும்.

உடல் எடை குறைக்க உதவும் ஓட்ஸ்-மஷ்ரூம் சூப்!

தேவையான பொருட்கள்: ஓட்ஸ் 1 கப், மஷ்ரூம் 1 கப், தண்ணீர் ½ கப், நெய் 1 டீஸ்பூன், பூண்டு 4 பல், வெங்காயம் 1, கரம் மசாலா பவுடர் 1 டீஸ்பூன், மிளகு தூள் ½ டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: காளான்களை சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு சூடானதும் பூண்டு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கவும். பின் காளான் சேர்த்து வேக விடவும். ஓட்ஸை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி இருபது செகண்ட்ஸ் ஓடவிட்டு எடுத்து பாதி வெந்திருக்கும் காளானோடு சேர்க்கவும். மேலும் அரை கப் தண்ணீர் சேர்க்கவும். கரம் மசாலா பவுடர், உப்பு சேர்த்து கலந்து, 15 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விடவும். பின் கீழிறக்கி மிளகு தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

பட்டர், க்ரீம் போன்ற கொழுப்பு சார்ந்த பொருள் எதுவும் சேர்க்காமல், எடை குறைப்பிற்கு உகந்த பொருட்களை மட்டும் உபயோகித்து தயாரிக்கப்படும் சூப்.... செய்து சுவைத்துத்தான் பாருங்களேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com