மூலிகை பக்கோடா ரெசிபிஸ்!

மூலிகை பக்கோடா ரெசிபிஸ்!

தேவையானவை:

கடலைமாவு - 1 கப்

அரிசிமாவு - 2 ஸ்பூன

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - சிறிது

கற்பூரவள்ளி, துளசி, தூதுவளை இலை (முள் நீக்கி)- எல்லாம் சேர்த்து 1/2கப், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

மூலிகை இலைகளைக் கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். மாவுடன் மூலிகை இலைகள், உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், தேவையான நீர் சேர்த்து ஒன்றாக கலந்து பிசைந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிறிது சிறிதாக உதிர்த்துப் போட்டுப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். வித்தியாச சுவையில் மூலிகை பக்கோடா தயார்.

ரவை பக்கோடா

தேவையானவை:

ரவை - 1 கப்

அரிசிமாவு - 1 ஸ்பூன்

முந்திரி பருப்பு - உடைத்தது 2

டீஸ்பூன்

பச்சைமிளகாய் நறுக்கியது - 2

இஞ்சி - சிறு துண்டு (நறுக்கியது)

வெங்காயம் - 1 (நறுக்கியது)

கறிவேப்பிலை, மல்லி இலை - நறுக்கியது சிறிது

நெய் - 1 ஸ்பூன்

உப்பு - சிறிது

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

வாணலியில் நெய் ஊற்றி, ரவையை வறுத்து எடுக்கவும். அதனுடன் அரிசிமாவு கலந்து அதில் முந்திரி, வெங்காயம், பச்சைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி, உப்பு கலந்து சிறிது சிறிதாக நீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் கழித்து சூடான எண்ணெயில் உதிர் உதிராகப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான பக்கோடா ரெடி. மழைக்கால மாலை நேரத்தில் சாப்பிடலாம்.

-வசந்தா மாரிமுத்து, சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com