ஓவன் அல்லது கிரில் இல்லாமல் உணவில் ஸ்மோக்கி ஃப்ளேவர் கொண்டு வருவது எப்படி?

ஓவன் அல்லது கிரில் இல்லாமல் உணவில் ஸ்மோக்கி ஃப்ளேவர் கொண்டு வருவது எப்படி?

ஒவ்வொருமுறையும் ஹேக்குகள் மற்றும் தந்தூரி டிக்காக்கள், அசைவ உணவு வகைகள் மற்றும் கபாப்கள் நாம் சுவைக்கத் தொடங்கும் போது ஒவ்வொரு கடியிலும் அதன் ஸ்மோக்கி ஃப்ளேவர் மற்றும் பஞ்சு போன்ற மென்மையால் அவை நம் நாவைக் கட்டிப் போடுகின்றன.

உண்மையில் இந்த ஸ்மோக்கி ஃப்ளேவரும், பஞ்சு போன்ற மென்மையும் கிடைக்க நமக்கு தந்தூர் அடுப்புகளோ அல்லது கிரில் அடுப்புகளோ தேவையில்லை!

அட அதெப்படி? என்கிறீர்களா? சொல்கிறேன் பொறுங்கள்.

இந்த மாலை நேரம் வந்து விட்டால் போதும் வீட்டுக் கொல்லைப்புறத்தில் பார்பிக்யூ கெட் டு கெதர் நடத்த மனம் கொள்ளை ஆசை கொண்டு விடுகிறது. ஆனால், பாருங்கள் இட வசதி தான் போதாது, என்ன செய்ய? பார்பிக்யூ பார்ட்டி என்றால் கிரில் அடுப்பு பொருத்த வேண்டுமே?! அது மட்டுமா? இந்த தந்தூர் மற்றும் பார்பிக்யூ உணவுகளின் ஸ்மோக்கி ஃப்ளேவர் வேறு நாக்கில் ஒட்டிக் கொண்டு போவேனா என்கிறது. கிரில் அடுப்பும் கிடையாது ஆனால், ஸ்மோக்கி ஃப்ளேவர் தந்தூரி உணவுகளைச் சுவைக்கவும் வேண்டும் என்றால் என்ன தான் செய்வது?

வழி இருக்கிறது என்றாள் தோழி.

அதெப்படி என்றதற்கு அவள் அந்த உணவுகளை கிரில் இல்லாமல் சமைத்தே காண்பித்து விட்டாள்.

அவள் கற்றுக் கொடுத்த முறைப்படி உணவில் தந்தூரி சுவையை சேர்க்க 5 வழிகளை இங்கே தந்திருக்கிறேன்.

ஸ்மோக்டு சால்ட்:

உங்கள் உணவில் அதாவது தந்தூரி ஸ்டைலில் நீங்கள் சமைக்க விரும்பும் உணவில் சாதாரண உப்பிற்குப் பதிலாக ஸ்மோக்டு சால்ட் சேர்த்தீர்கள் என்றால் வேலை முடிந்தது. சமைக்கும் முறை எல்லாம் ஒன்று தான். எப்போதும் போல சமைத்து எடுத்து அதில் இந்த ஸ்மோக்டு சால்ட்டை மேலே தூவி விட வேண்டியது தான். உங்களது ஸ்மோக்கி ஃப்ளேவர் இப்போது ரெடி.

ஸ்மோக்டு மசாலா:

ஸ்மோக்டு மசாலா என்றதும் குழம்பி விடாதீர்கள். நம்ம ஊர் ரெட் சில்லியைத் தான் மேலை நாட்டில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள். இதில் காரம் கூடியதும்

இருக்கிறது. குறைவான காரம் கொண்டதும் இருக்கிறது. இதில் ஸ்மோக்டு மிளகாய்த்தூள் என்பது பிமிண்டோ மிளகாய்த்தூள் மூலம் தயாரிக்கப்படுகிறது, அவை வெயிலில் உலர்த்தப்பட்டு, தூள் தூளாக நசுக்கப்படுவதற்கு முன்பு தீயில் புகைபிடிக்க வைக்கப்படுகின்றன. இதில் நம் விருப்பத்திற்கு ஏற்ப பச்சை ஏலக்காய்க்கு பதிலாக புழுக்கிய ஏலக்காயைக் கூட மசாலாவாகப் பயன்படுத்தலாம். ஏனெனில் கருப்பு ஏலக்காய் இயற்கையாகவே புகைபிடிக்கும் சுவையில் பேக் செய்யப்படுகிறது.

அடுப்புக் கரி:

உண்மையில் மேலே சொன்ன முதலிரண்டு முறைகளைக் காட்டிலும் இது தான் உண்மையான தந்தூர் சமையலுக்கு மிக அருகில் இருக்கும். நீங்கள் ஒரு சிறிய கரியை அடுப்பில் வைத்து எரித்து, அதற்கு மேலே நீங்கள் சமைத்த உணவை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதன் மேலே துளைகள் நிறைந்த மூடி கொண்டு மூடி சற்று நேரம் புகை அதன் மேலே ஊடுருவ இடம் தரலாம். இதனால் உணவில் புகை ஊடுருவி ஸ்மோக்கி ஃப்ளேவர் எளிதாகக் கிடைத்து விடும்.

மண் பானை:

முன்பெல்லாம் நம் முன்னோர்கள் தங்கள் உணவுகள் அனைத்தையுமே மண் பானைகளில் தான் சமைத்து எடுப்பார்கள், அதனால் தான் அவர்கள் தங்களது ஒவ்வொரு உணவிலும் தந்தூர் போன்ற சுவையை அனுபவித்து வந்தனர். இப்போதும் நீங்கள் மண் பானையில் சமைக்கலாம் தான் ஆனால் அதைக் கடினம் என்று நினைப்பவர்களுக்கு எளிதாக ஒரு ட்ரிக் உதவக்கூடும். அது என்னவென்றால், ஒரு சிறிய மண் பானை அல்லது ஒரு பெரிய மண் பானையின் உடைந்த துண்டை அடுப்புத் தீயில் வைத்து நன்கு சூடுபடுத்தி அதில் நெய் தடவி நீங்கள் சமைத்த உணவு இருக்கும் பாத்திரத்தில் போட்டு சில நிமிடங்கள் மூடி வைத்தால் போதும். நமக்கு அந்த ஸ்மோக்கி ஃப்ளேவர் வெகு எளிதாகக் கிடைத்து விடும்.

லிக்விட் ஸ்மோக்:

லிக்விட் ஸ்மோக் அல்லது திரவ புகை என்பது மதுபானங்களை தீப்பிடிக்கச் செய்ய பார்களில் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் உண்ணக்கூடிய உணவுகளில் இந்த திரவ புகையைக் செலுத்திப் பார்க்கலாம். இது மிகவும் எளிமையானது.

ஆகவே வீட்டில் தந்தூர், கிரில் அல்லது ஓவன் இல்லையென்றால் இனி கவலை வேண்டாம். இந்த எளிதான சமையல் ட்ரிக்குகளைப் பயன்படுத்தி ஸ்மோக்கி ஃப்ளேவர் உணவுகளை நாம் எளிதில் சமைத்து உண்ண முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com