அருமையா முக்கனி பாயாசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
மாம்பழம் -1
வாழைப்பழம் -2
பலாச்சுளை - 4
கன்டென்ஸ்டு மில்க் -3 டேபிள் ஸ்பூன்பால்
(திக்காககாய்ச்சி குறுக்கியது) - 3கப்
சர்க்கரை -3/4கப் அல்லது தேவைக்கேற்
ஏலக்காய்த்தூள்1டீஸ்பூன்
பழ எசன்ஸ் - சில சொட்டுகள்,
பாதாம்
முந்திரி
பிஸ்தா
2டேபிள்ஸ்பூன் - நெய்யில் வறுத்தது
நெய்-2டீஸ்பூன்.
செய்முறை :
பழங்களை தோல் சீவி கொட்டை நீக்கி சிறியதாக கட் பண்ணி வைக்கவும். திக்கான பாலை பாத்திரத்தில் ஊற்றி கொதித்ததும், சர்க்கரை சேர்க்கவும். இறக்கி சற்று ஆறியதும் கன்டென்ஸ்டு மில்க் , எசன்ஸ், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் . பின் நட்ஸ் எல்லாம் சேர்த்து கடைசியாக நறுக்கிய பழங்களை சேர்க்கவும். நன்கு கலந்து சூடாகவோ குளிர வைத்தோ பரிமாறலாம். முக்கனி யும் கிடைக்கும் இந்த சீசனில் இந்த பாயசத்தை செய்து அசத்துங்கள். இந்த பாயாசம் சமைக்கப்படாத பதிப்பு மற்றும் சில நிமிடங்களில் தயாரிக்கப்படுகிறது. கோடைக்காலத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிட இது சரியான பானம்.