
வெற்றிலை கொழுகட்டை :
தேவையான பொருட்கள்:
1. வெற்றிலை
2. அரிசி மாவு
3. சிவப்பு மிளகாய்
4. தேங்காய்
5. கடுகு
6. சீரகம்
7. உளுந்து
8. இஞ்சி
9. உப்பு.
1. வெற்றிலை கொழுகட்டை செய்முறை :
படி 1: வெற்றிலையை பொடியாக நறுக்க வேண்டும் . ஒரு அகலமான பாத்திரத்தில் இடியப்பா மாவு அல்லது கொழுகட்டை மாவு , பொடியாக நறுக்கிய வெற்றிலை , உப்பு , தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
படி 2 : தாளிப்பு கரண்டியில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு , உளுந்து , சீரகம் , மிளகாய் ஆகியவற்றை தாளித்து மாவில் போடவும். சிறிது இஞ்சி எடுத்து துருவி மாவில் சேர்க்கவும்.
படி 3: மாவில் நன்கு கொதிக்கும் தண்ணிரை சிறுது சிறுதாக சேர்த்து கலக்கவும்.
படி 4: கலந்த மாவை கொழுகட்டையாக புடிக்கவும். ஒரு கொழுக்கட்டையை ஒரு முழு வெற்றிலைக்குள் வைத்து மடிக்கவும் . இதே போல் எல்லா கொழுகட்டையும் தயார் செய்து வைத்து கொளவும்.
படி 5 : இட்லி குண்டானில் தண்னீர் கொதித்தவுடன் இட்லி தட்டில் வெற்றிலை கொழுகட்டை அடுக்கி மூடி போட்டு 6 நிமிடம் வேக விடவும்.
குறிப்பு :
வெற்றிலை கொழுகட்டை உடம்புக்கு மிகவும் நல்லது . சளி இருமல் இருந்தால் இதை சாப்பிடவும்.
2. சக்கரவல்லி கிழங்கு கோதுமை அப்பம்:
1. கம்பு மாவு
2. இனிப்பு உருளைக்கிழங்கு
3. நாட்டு சக்கரை
4. பால்
5. உப்பு
6. சமையல் சோடா (விரும்பினால்).
2. சக்கரவல்லி கிழங்கு செய்முறை:
படி 1 : சக்கரவல்லி கிழங்கை துண்டு துண்டாக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும்.
படி 2 : வேக வைத்த சக்கரவல்லி கிழங்கை தோல் உரித்து ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்து நன்கு மசித்து கொள்ளவும். அத்துடன் கம்பு மாவு, பால், உப்பு, நாட்டுச்சக்கரை இவை அனைத்தையும் கலந்து தோசை மாவு பதத்தில் கலக்கவும்.
படி 3: இந்த மாவுடன் தேவை என்றால் சிறிது ஆப்ப சோடாவை கலந்து கொள்ளலாம்.
படி 4 : ஒரு அகலமான பாத்திரம் அடுப்பில் வைத்து சூடு படுத்தி சிறிது அளவு நெய் அல்லது எண்ணெய் உற்றி ஒரு குழி கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். அதன் மேல் ஒரு முடி வைத்து மூடவும். அடுப்பு தீயை சிரிதாக வைத்து அப்பம் போல் சுட்டு எடுக்கவேண்டும்.
குறிப்பு :
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம் .
-நித்யலட்சுமி S