மணக்க, மணக்க சுவையான கேரட் சாதம்!

மணக்க, மணக்க சுவையான கேரட் சாதம்!

Published on

தேவையானவை :

உதிரி உதிரியாய் வேகவைத்த சாதம் - 2 கப்

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு, உளுத்தம்பருப்பு - 1ஸ்பூன்

பட்டை - 2 துண்டு

கிராம்பு, ஏலக்காய் தலா - 2

பிரிஞ்சி இலை - 1

முந்திரி பருப்பு - 20

நீள் வாக்கில் மெல்லிசா வெட்டிய பெரிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய மிளகாய் - 2

துருவிய கேரட் - 2 கப்

குடை மிளகாய் - 1/2

சாம்பார் பொடி - 2 ஸ்பூன்

தேங்காய் துருவல் - 4ஸ்பூன்

மல்லி கீரை - 1கைப்பிடி

உப்பு - தேவைக்கு

செய்முறை :

கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மிளகாய், போட்டு தாளித்து முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து விடவும்.

பின் வெங்காயத்தை போட்டு கலர் மாறும் வரை வதக்கவும். பின் கேரட் துருவல் சேர்த்து வதக்கி, குடைமிளகாயை நீள் வாக்கில் மெல்லிசா வெட்டி சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும், சாம்பார் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து 3 நிமிடம் வதக்கி பின் உதிரியாய் சாதத்தை சேர்த்து எல்லாம் ஒன்றுசேர கலந்து விடவும்.

இறுதியாக மல்லிக்கீரை தூவி 1 நிமிடம் கலந்து விட்டு இறக்கவும். மிகவும் அருமையான கேரட் சாதம் ரெடி.

logo
Kalki Online
kalkionline.com