சுவையான வெள்ளரி விதை அல்வா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:
வெள்ளரி விதை – 100 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
நெய் – 100 கிராம்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
பிஸ்தா தூள் – இரண்டு டீஸ்பூன்
முந்திரி - 6
குங்குமப்பூ – சிறிதளவு,
கேசரி பவுடர்– ஒரு ஸ்பூன்.
செய்முறை:
வெள்ளரி விதைகளை ஒரு மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து விழுதாக அரைக்கவும். வாணலியில் சர்க்கரை, கேசரி பவுடர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
நுரை வரும்போது அரைத்த வெள்ளரி விழுது, நெய் சேர்த்துக் கிளறி சுருண்டு வரும்போது இறக்கவும். பிறகு ஏலக்காய்த்தூள் , பிஸ்தா தூள் , குங்குமப்பூ , வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால், சுவையான கம கம வெள்ளரி விதை அல்வா தயார். பசுமை நிறம் தேவை என்றால், கடையில் கிடைக்கும் கலர் பொடியை சிறிது தூவி கலக்கியபின் இறக்கிவிட வேண்டும். அதிகபட்சம் இருபது நிமிடத்தில் இந்த வேலை முடிந்தாலும் அதன் பிறகு, மூன்று மணி நேரத்துக்கு அந்தப் பாத்திரத்தை மூடி, அப்படியே ஆற வைக்க வேண்டும். மெதுவாக ஆறினால் மட்டுமே நெகிழ்வான நிலையில் அல்வா இருக்கும்.