சுவையான பச்சை மொச்சை பருப்பு பொரியல் செய்வது எப்படி ?

சுவையான பச்சை மொச்சை பருப்பு பொரியல் செய்வது எப்படி ?

தேவை :

மொச்சைக் காயிலிருந்து உரித்தெடுத்த பயறு 200 கிராம்

தேங்காய்த் துருவல் ½ கப்

சீரகம் ½ டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் 1½ டீஸ்பூன்

தனியா தூள் 1½ டீஸ்பூன்

மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்

கடுகு 1டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை 1 இணுக்கு

பொடிசா நறுக்கிய வெங்காயம் 100 கிராம்

உப்பு & தண்ணீர் தேவைக்கேற்ப.

செய்முறை :

ச்சை மொச்சைப் பயிறை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கவும். தேங்காயை சீரகத்துடன் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பா அரைத்தெடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறம் ஆனதும் அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதி வரும்போது, உப்பு, மிளகாய், தனியா, மஞ்சள் தூள்களைச் சேர்க்கவும்.

பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். கிரேவி பதம் வருகையில், நீரை வடித்து மொச்சைப் பயிறை போடவும்.

சிறு தீயில் வைத்து நன்கு கலந்து, கொஞ்சம் கூட நீர் பதம் இன்றி மசாலா ஃபிரை ஆகி மொச்சையுடன் ஒன்றாகக் கலந்ததும் இறக்கிவிடவும். சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையான சைட் டிஷ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com