
தேவையான பொருட்கள்:
கம்பு- 200 கிராம்
கருப்பட்டி -150 கிராம் (நன்கு பொடித்துக் கொள்ளவும் ) பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள்- இரண்டு டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி
(உலர் பழங்கள்) - சிறிதளவு
ஏலக்காய் தூள் -கால் டீஸ்பூன்
செய்முறை :
அடி கனமான வாணலியில் கம்பை பொன்னிறமாக வறுத்து, (எண்ணெய் விடாமல்) ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இதில் உலர் பழங்கள், தேங்காய் துண்டுகள் ,பொடித்த கருப்பட்டி, ஏலக்காய் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் நன்கு கலக்கவும். இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து மாவு (எந்த வடிவத்தில் வேண்டுமானாலும்) உடையாமல் உருண்டை பிடிக்கும் பதத்திற்கு நீர் தெளித்து நன்கு கிளறவும். (தட்டையாக, உருண்டையாக, நீள் வடிவமாக)
பிடித்த உருண்டைகளை இட்லித் தட்டில் ஆவியில் 15 நிமிடம் வேக வைத்து எடுத்து சுடச் சுட பரிமாறவும்.
சுவையில் அசத்தும் இந்த 'மில்லட்ஸ் மித்தாய்'!
-சந்தியா கார்த்திகேயன்