அருமையான சுவையில் ப்ளைன் சால்னா செய்வது எப்படி ?

அருமையான சுவையில் ப்ளைன் சால்னா செய்வது எப்படி ?

சிம்பிளா அதே சமயம் ரொம்ப சுவையான சால்னா இது. இதனை டிபனுக்கு தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும். ரொம்ப மெனக்கிடாமல் ஈசியாக பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். இதனை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என எதற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி இரண்டு

சின்ன வெங்காயம் - 6

இஞ்சி சிறிது

பூண்டு பற்கள் நான்கு

சோம்பு அரை ஸ்பூன்

மிளகு சீரகம் ஒரு ஸ்பூன்

பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி

ஏலக்காய் ஒன்று

கிராம்பு ஒன்று

தேங்காய் துருவியது அரை கப்

காரப்பொடி ஒரு ஸ்பூன்

தனியா பொடி ஒரு ஸ்பூன்

தாளிக்க:

பட்டை 1 ,கிராம்பு 1, பிரியாணி இலை ஒன்று ,வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது ஒன்று அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்க வேண்டிய பொருட்களை பற்றி கிராம்பு பிரியாணி இலை வெங்காயம் சேர்த்து எண்ணிவிட்டு நன்கு வதக்கவும்.

சோம்பு, சீரகம் ,மிளகு, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு ,தேங்காய் துருவியது, பொட்டுக்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொண்டு அத்துடன் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு விழுதாக அரைத்தெடுக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கியதும் அதில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து ஒரு நிமிடம் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், தனியா பொடி, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கொதித்து கெட்டியானதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்க சூப்பரான சிம்பிள் சால்னா ரெடி.

இதனை சப்பாத்தி, பரோட்டா, பூரி, இட்லி ,தோசை என டிபன் அயிட்டங்களுக்கு தொட்டுக்கொள்ள ருசியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com