சுவையான மாம்பழ போளி

தேவையானவை :
கனிந்த இனிப்பான மாம்பழம் - மூன்று
நாட்டு சர்க்கரை - 3 கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
நெய் - ஒரு கப்
குங்குமப்பூ - சிறிது
மைதா மாவு - இரண்டு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
மைதா மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
மாம்பழங்களை தோல் நீக்கி துண்டுகளாக்கி அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து கனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளறவும். கெட்டியாகி அல்வா போல் ஆனதும் குங்குமப்பூ சேர்த்து இறக்கி வைக்கவும்.
மைதா மாவை உருண்டைகளாக உருட்டி அப்பளங்களாக இடவும். மாம்பழ பூரணத்தை சிறு உருண்டையாக உருட்டி அப்பளத்தில் வைத்து, இன்னொரு அப்பளத்தால் மூடி, தட்டி, அழுத்தி இணைக்கவும். தோசைக் கல்லில் ஒவ்வொரு போளியாக போட்டு வேகவைத்து எடுக்கவும். இப்போது மாம்பழ போளி ரெடி.
மாம்பழ சீசனில் இதை செய்து சுவைத்துப் பாருங்களேன்.