முளைக்கீரை பொரியல் செய்வது எப்படி?

முளைக்கீரை பொரியல் செய்வது எப்படி?

தேவையானவை:

முளைக்கீரை - 1 கட்டு

துருவிய தேங்காய்ப்பூ - முக்கால் கப்

பொடியா நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கடுகு - ஒரு டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய், - தேவையான அளவு.

செய்முறை:

கீரையின் வேர் பகுதியை நீக்கிவிட்டு, நிறைய தண்ணீரில் முக்கி, கல் மண் போகும்படி இரண்டு முறை சுத்தம் செய்யவும். பின் தண்டையும் இலைகளையும் பொடிசா நறுக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உழுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சேர்க்கவும். பின் பச்சை மிளகாயை கிள்ளி போட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு கீரையை போட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கீரையிலிருந்தே தண்ணி வரும்.

கீரை வெந்து, தண்ணீரெல்லாம் வற்றியதும், தேங்காய்ப்பூ சேர்த்து ரெண்டு பிரட்டு பிரட்டி இறக்கவும்.

சத்து நிறைந்த முளைக்கீரைப் பொரியல் ரெடி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com