ரெசிபி கார்னர்
காளான் பக்கோடா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
பொட்டுக் கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - கால் கப்
நறுக்கிய காளான் - 4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கடலை மாவு, அரிசி மாவு, மஷ்ரூம், வெங்காயம், இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, எண்ணெயுடன் சிறிதளவு தண்ணீரை தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளான் கலவையை உதிர்த்துப் போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
சுவையான காளான் பக்கோடா ரெடி.