
தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு 1 கைப்பிடி
கடலை பருப்பு 1 கைப்பிடி
மசூர் பருப்பு 1
கைப்பிடி முழு உளுந்து 1 கைப்பிடி
பாசிப்பருப்பு 1 கைப்பிடி
கருப்பு கொண்டை கடலை 1 கைப்பிடி
வெள்ளை பட்டாணி 1 கைப்பிடி
பட்டாணி பருப்பு 1 கைப்பிடி
பச்சைப்பயிறு 1 கைப்பிடி
அரிசி 1/2 கப்
பச்சை மிளகாய் 4
சீரகம் 1 தேக்கரண்டி
எண்ணெய் 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
தக்காளி 1
கறிவேப்பிலை 2 கொத்து
கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப
கறி மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
செய்முறை:
அனைத்து பருப்பு மற்றும் பயறு வகைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவேண்டும் .தனி பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தை தனியாக ஊற வைக்க வேண்டும் நன்கு ஊறிய பருப்பு,பயிர், அரிசியை சிறிது சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை உப்பு சேர்த்து 4 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும். புளித்த மாவை இட்லி தட்டில் எண்ணெய் தடவி,ஆவியில் 15 முதல் 18 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும் வெந்த இட்லி பூ போல் மலர்ந்திருக்க வேண்டும் வெந்த இட்லியை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மற்றும் வெங்காயம், தக்காளி,கறிவேப்பிலையை தாளித்து ,துண்டங்களாக்கிய இட்லியை சேர்க்க வேண்டும். வெங்காய தக்காளி கலவை நன்கு இட்லியுடன் கலந்தபின் மசாலா பொடிகளை அதனுள் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கலக்கவும்.
இதுவே நவரத்தின பருப்பு பயிர் மசாலா இட்லி ஆகும். நவரத்தின பருப்பு பயறு மசாலா இட்லி தனித்தோ அல்லது பொடி மற்றும் சாஸுடன் உண்ணலாம்.
-ஜெயந்தி அசோகன்