ரெசிபி கார்னர்
உருளைக்கிழங்கு தோசை செய்வது எப்படி?

தேவையானவை :
உருளைக்கிழங்கு - பெரியது மூன்று
புழுங்கல் அரிசி - 3 கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
புழுங்கல் அரிசியை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைக்கவும்.
உருளைக்கிழங்கு வேக வைத்து தோல் எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
அதை மாவோடு கலந்து உப்பு சேர்த்து, எட்டு மணி நேரம் மூடி வைத்து, பிறகு தோசை வார்க்கலாம்.
இந்த தோசை சுவையாக இருக்கும். செய்வது எளிது. உளுந்தம் பருப்பு சேர்க்கத் தேவையில்லை.