செசமி, ஜாக்லீஃப் கோன்

Steam & Cooking Contest
Steam & Cooking Contest

தேவையான பொருட்கள் :

பச்சரிசிமாவு-200 கிராம்,

எள்-50கிராம்,

தேங்காய் துருவல்-6 டேபிள் ஸ்பூன்,

சின்ன அச்சு வெல்லம்-2,

ஏலக்காய்-3,

சிறிது ஆயில்,

சிறிது உப்பு.

செய்முறை :

1.எள்ளை மிதமான சூட்டில் வைத்து பொரியும் வரை வறுக்கவும். வறுத்த எள்ளை ஆரவைக்கவும். (ஆரியதும் இடித்து வைக்கவும்). அதே பாத்திரத்தில் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் வாசம் வரும் வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் சேர்த்து கால் டம்ளர் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். பாகு தண்ணீரில் விட்டு பார்த்தால் உருட்டும் பதம் வர வேண்டும். அந்த பாகில் இடித்த எள், வறுத்த தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து, கெட்டியாகும் வரை கிளறி எடுத்து வைக்கவும்.பூரணம் ரெடி.

2. அடுத்து அரிசி மாவுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து விடவும். பிறகு தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து மாவில் ஊற்றி கரண்டியால் மிக்ஸ் பண்ணவும். மாவு கொஞ்சம் சூடு ஆரியதும் கையால் முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும்.

3. பலா இலைகளை பறித்து கழுவி துடைத்து வைக்கவும். இந்த இலைகளை கோன் போல் செய்து பிய்யாமல் இருக்க டூத் பிக்கை சொருகவும்.

4. கோன் போல் செய்த பலா இலையின் உள்ளே ஆயில் தடவவும். பிறகு கிளறி வைத்த மாவை சிறிது எடுத்து, இலையின் உள்ளே ஸ்பிரட் பண்ணவும். அதில் ரெடி செய்த எள் பூரணத்தை வைக்கவும். அதன் மேல் சிறிது மாவை வைத்து மூடவும். இதே போல் எல்லா கொழுக்கட்டையையும் செய்து, ஆவியில் வேக வைக்கவும். பத்து நிமிடம் ஆவியில் வேகவைத்தால் போதும், சுவையான ஆவியில் வேக வைத்த செசமி ஜாக்லீஃப் கொழுக்கட்டை ரெடி.

-ரேவதி ராமகிருஷ்ணன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com