Steam & Cooking Contest
Steam & Cooking Contest

ரொட்டி வெஜ் ரோல்!

Published on

தேவையான பொருட்கள்:

1.ரொட்டி - 8 துண்டுகள்

2.பால் - 1/2 கப்

3.வெங்காயம்- 1

4.பூண்டு -4 பல்

5.கேரட்-1

6.குடை மிளகாய்-1

7.எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்

8.புதினா மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு

9. தேவையான அளவு உப்பு

செய்முறை :

முதலில் பிரெட்டை மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளவும். தூளாக்கி வைத்த பிரெட்டை பால் கொண்டு சப்பாத்தி மாவுப் போன்று சிறிது கெட்டியாக பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை மாநிறமாகும் வரை வதக்கவும்.அதன்பிறகு பொடியாக நறுக்கிய கேரட் மற்றும் குடை மிளகாயை பாதியளவு வேகும் வரை வதக்கவும். கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டு மசாலா வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும். புதினா, கொத்தமல்லி போட்டு இறக்கவும். சிறிது கையில் எண்ணெய் தேய்த்து பிசைந்து வைத்து பிரெட் மாவை சிறிது உருண்டையாக எடுத்து சப்பாத்திப் போன்று திரட்டவும் . அதில் தயார் செய்து வைத்த மசாலா பொருட்களை 1 டேபிள் ஸ்பூன் வைத்து மடித்து வைக்கவும். வேக வைத்ததை ஒரு தட்டில் எடுத்து தக்காளி சாஸ் மற்றும் கொத்தமல்லி கொண்டு அலங்கரிக்கவும். இப்பொழுது சுடசுட ஸ்டீம்ட் பிரட் வெஜ் ரோல் ரெடி.

-நிஜாம் பீபீ ஏ

logo
Kalki Online
kalkionline.com