ஸ்டப்ட் பொட்டேடோ இடியாப்பம்!
தேவையான பொருட்கள் :
இடியாப்பம் மாவு - 1/2 கப்,
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1.5 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
ஸ்டப்பிங் செய்ய :
மசித்த உருளைக்கிழங்கில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து வைக்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அது காய்ந்தவுடன் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு நன்றாகக் கிளறவும். மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து, மீண்டும் நன்றாகக் கிளறி, அடுப்பை அணைத்து விடவும்.
இடியாப்பம் செய்ய:
முக்கால் கப் தண்ணீரை கொதிக்க வைத்து, 1டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து, இடியாப்பம் மாவை சிறிது சிறிதாக தூவி, கட்டி விழாமல் கிளறி அடுப்பை அணைத்து விடவும். இடியாப்ப அச்சில் எண்ணெய் தடவி, மாவை நிரப்பவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி, இட்லி குழியில் இடியாப்பம் பிழியவும்.
ஒரு டீஸ்பூன் அளவு மசாலாவை மேலே மெதுவாக வைத்து, மசாலா மேல் மீண்டும் இடியாப்பம் பிழியவும். இட்லி பானையில் வைத்து 5 அல்லது 7 நிமிடம் வரை ஆவியில் வேகவைக்கவும். சூடாகப் பரிமாறவும்.
-நித்யா பாலாஜி