காரடையான் நோன்பு வெல்ல அடை, கார அடை செய்வது எப்படி?

காரடையான் நோன்பு வெல்ல அடை, கார அடை செய்வது எப்படி?

மார்ச் 15 காரடையான் நோன்பு கணவன் சத்தியவானின் உயிரை மீட்க சாவித்திரி விரதம் மேற்கொண்ட நாள். சத்தியவான் சாவித்திரி கதை பெரும்பாலானவர்கள் அறிந்தது தான். எமனிடமிருந்து தன் கணவனை மிக்க அவனையே தன் சொற்களால் மடக்கியவள் சாவித்திரி

காரடையான் நோன்பு அன்று வெல்ல அடையும், கார அடையும் தயாரித்து சுவாமிக்கு நைவேத்தியமாக படைப்பர்.

வெல்ல அடை

ச்சரிசி - ஒரு கப், வெல்லத்தூள் - கால் கப், பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - மூன்று டேபிள் ஸ்பூன் ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன் காராமணி- ஒரு கைப்பிடி, நெய் - சிறிதளவு.

அரிசியை நன்கு கழுவி, நிழலில் உலர்த்தி ,லேசாக ஈரம் இருக்கும்போதே ரவையாக (நைஸாக) பொடித்து ஆறியதும் வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும்.

காராமணியை வறுத்து குக்கரில் வேக விடவும். வெல்லத்தில் இரண்டு கப் நீர் சேர்த்து சூடாக்கி, வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் கொதிக்க வைத்து அதில் தேங்காய் துண்டுகள், காராமணி, ஏலத்தூள், வறுத்த மாவு ஆகியவற்றை சேர்த்து கிளறி இறக்கவும் . ஆறியதும் சிறு அடைகளாக தட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

கார அடை

ச்சரிசி -ஒரு கப், கடுகு உளுந்து தலா-ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் -இரண்டு டேபிள் ஸ்பூன் இஞ்சி பச்சை மிளகாய் விழுது- 2 டீஸ்பூன்  பெருங்காயத்தூள்- அரை டீஸ்பூன் காராமணி- ஒரு கைப்பிடி உப்பு , எண்ணெய்,நெய் தேவையான அளவு.

அரிசி நன்கு கழுவி நிழலில் உலர்த்தி லேசான ஈரம் இருக்கும் போதே ரவையாக (நைசாக ) பொடித்து ஆறியதும் வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். காராமணியை வறுத்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி விழுதைச் சேர்த்து வதக்கி இரண்டு கப் நீர் சேர்க்கவும் .அதில் தேங்காய் துண்டுகள், வேகவைத்த காராமணி , பெருங்காயத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். ஆறியதும் சிறு அடைகளாகத் தட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

பெண்கள் கல்வியின் மூலமே புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பெண் இனத்துக்கு கற்றுத் தருகிறாள் சாவித்திரி.

இரண்டு அடை செய்தால் மட்டும் போதுமா. கூடவே சாவித்திரிக்காக நாம் ஒரு பாயசம் செய்து படைக்கலாமே!

ஈஸி பாயசம்

ரு கப் கெட்டியான பசும்பாலில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை போட்டு கரைந்ததும் ,அதனுடன் இரண்டு டீஸ்பூன் பாதாம் பவுடர், இரண்டு டேபிள் ஸ்பூன் கன்டன்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் . கொதித்து ஒன்று சேர்ந்தவுடன் இறக்கி வைத்து பொடியாக நறுக்கிய முந்திரி, மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து போடவும். மேலே குங்குமப்பூவைத் தூவவும் அருமையான சுவையில் அசத்தும் இந்த திடீர் பாயசம்.

வெல்ல அடை, கார அடை, பாயசம் செய்து இந்த காரடையான் நோன்பை மன நிம்மதியுடனும் மகிழ்வுடன் கொண்டாடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com