ஸ்வீட் கார்ன் அல்வா செய்வது எப்படி?

ஸ்வீட் கார்ன் அல்வா செய்வது எப்படி?
எஸ்.ராஜம்

என் வயது 84. கல்கி இதழ் பிறந்ததிலிருந்தே என் தாயார் கல்கி இதழை படித்ததை பார்த்து, பார்த்து வளர்ந்ததால் எனக்கும் படிப்பார்வம் பிறந்தது. பின்னர் எழுத்தார்வம் உருவானது. கல்கி இதழுக்கு 16 வயதில் இருந்து என் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தேன். பிறகு மங்கையர் மலர் பிறந்ததும் அதற்கு கதை, கவிதைகள், கட்டுரைகள் துணுக்குகள் ஜோக்ஸ், டிப்ஸ், கோலங்கள் என்று அனுப்பி கொண்டிருக்கிறேன். அவை பிரசுரமாகி எனக்கு உற்சாகமூட்டுகின்றன. கல்கி குழும இதழ்கள் நடத்திய போட்டிகளில் பங்கு கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளேன். ராஜம் எனும் என் பெயரிலும் ராஜலட்சுமி பாரதி மகள் ஆகிய துணை பெயர்களிலும் இன்று வரை தொடர்ந்து எழுதி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக கல்கி குழுமத்துடன் நாங்கள் உறவு வைத்திருப்பது எனக்கு பெருமை தருகிறது.

Updated on

தேவையானபொருட்கள் :

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்

சர்க்கரை - 2 கப்

நெய் - 1/2 கப்

முந்திரி - 1/4 கப்

ரவை - 1 ஸ்பூன் 

துருவிய சீஸ் - 1/2 கப் 

ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை.

செய்முறை :

மிக்சியில் ஸ்வீட் கார்ன் முத்துக்களை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். 

வாணலியில் 1/2 கப் நெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து முந்திரியை வறுத்து எடுத்து தனியே வைக்கவும். 

பிறகு அதே நெய்யில் ரவையை கொட்டி வறுத்து, அத்துடன் அரைத்த ஸ்வீட் கார்ன் விழுதை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். 

கலவை நன்கு வெந்து சுருண்டு வரும்போது சீஸ், சர்க்கரை சேர்த்து கிளறவும். 

நடுநடுவே நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு வாணலியில் ஒட்டாமல் வந்ததும் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும். 

சுவையான ஸ்வீட் கார்ன் அல்வா... ரெடி.

logo
Kalki Online
kalkionline.com