வெஜிடபிள் பன் பரோட்டா!
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு ஒரு கப் பீன்ஸ் 100 கிராம்
பச்சை பட்டாணி 100 கிராம்
கேரட் ஒன்று
குடமிளகாய் ஒன்று
காலிபிளவர் சிறிது
பெரிய வெங்காயம் ஒன்று
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
கரம் மசாலா தூள்
தக்காளி சாஸ்
சிறிது புதினா கொத்தமல்லி
இஞ்சி பூண்டு பேஸ்ட்
செய்முறை :
கோதுமை மாவில் உப்பு சேர்த்து பூரி மாவு போல் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கொடுக்கப்பட்ட காய்கறிகளை பொடியாக அரிந்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மசாலா பொடிகளை கலக்கவும். பச்சை வாசம் போக வதக்கி புதினா கொத்தமல்லி தக்காளி சாஸ் கலந்து இறக்கி ஆற வைக்கவும். கோதுமை மாவை உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும். வதக்கிய மசாலாவை நடுவில் வைத்து,மாவை மடித்து உள்ளங்கையில் வைத்து , கட்லெட் போல தட்டவும். இட்லி பானையின் தட்டில் துணியால் நன்கு சுற்றி கட்டவும்.
அப்போதுதான் பரோட்டாகளின் மீது நீர் விழுவது தவிர்க்கப்படும். இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தட்டிய பரோட்டாக்களை, ஐந்து நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். சிறிது நேரம் ஆற வைக்கவும்.
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, பரோட்டாக்களை, இரண்டு புறமும் சிவக்க பொறிக்கவும். வெளியே மொறு மொறுப்பாகவும், உள்ளே மிருதுவாகவும் சாப்பிட சுவையாக இருக்கும்.
-ஜெயப்பிரதா டி