வாழைக்காய் வைத்து வெஜ் மீன் செய்யலாமா? இனி Non veg இல்லைனு கவலை வேண்டாம்!

Veg fish
Veg fish

அசைவ பிரியர்களுக்கு ஒரு நாள் வெஜிட்டேரியன் சாப்பிடுவது கூட சலிப்பாக தான் இருக்கும். அதுவும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அசைவம் இல்லையென்றால் அந்த நாள் நாளாகவே இருக்காது என்று புலம்புவார்கள். என்னதான் வெஜிட்டேரியனில் பல வெரைட்டி இருந்தாலும் கூட நான் வெஜ்ஜிற்கு இணை எதுவும் இல்லை என்றும் சொல்வார்கள். இனி அந்த கவலையை போக்க வெஜ் ஐட்டெங்களை வைத்தே மீன் செய்வது எப்படி என பார்க்கலாம். அதாவது சைவ மீன் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2

எண்ணெய் - தேவையான அளவு

அரைக்க

சின்ன வெங்காயம் - 8

இஞ்சி - 1 அங்குல அளவு

பூண்டு உரித்தது - 10 - 15

பச்சை மிளகாய் - 1

மிளகு - 1/4 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - ½ மூடி

அரிசி மாவு - 4 டீஸ்பூன்

கார்ன்ஃப்ளார் - 4 டீஸ்பூன்

கடலை மாவு - 4 டீஸ்பூன்

செய்முறை:

இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் வாழைக்காயை தோல் உரித்து தயாராக வைக்கவும். வாழைக்காயை மீன்களை போல வெட்டி தயாராக வைக்கவும். சைடு ஆக வெட்டினால் மீன்களை போன்ற வடிவில் கிடைக்கும். இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் மேலே குறிப்பிட உள்ள அனைத்து பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்ட் ஆக அரைக்கவும். இந்த மசாலாவை நறுக்கி வைத்துள்ள வாழைக்காய் மீது தடவி 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

இப்போது ஒரு தோசை கல்லை சூடாக்கி சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். பின்னர் மசாலா தடவிய வாழைக்காயை தோசை கல்லில் அடுக்கி இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அவ்வளவு தான் டேஸ்டியான வெஜ் மீன் வறுவல் ரெடி. இதனை தயிர் சாதம், புளியோதரை என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com