நூடுல்ஸ் பிறந்தது எப்படி?

நூடுல்ஸ் பிறந்தது எப்படி?

ன்ஸ்டன்ட் நூடுல்ஸ் எங்கிருந்து வந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானுக்கு மீண்டும் செல்ல வேண்டும். குண்டுவீச்சினால் பல பகுதிகள் அழிக்கப்பட்டு பெரும்பாலான மக்கள் பட்டினி கிடந்த காலம் அது. மோமோபிக்கு அன்டோ என்கிற ஜப்பானிய தொழிலதிபர் தன்னுடைய தொழிலில் நஷ்டமடைந்து கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தார். அவர் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டு வர நினைத்தார். கடும் குளிரில் ஒரு கப் பாரம்பரிய ரேமென் நூடுஸ்ஸுக்காக பசியோடு நீண்ட வரிசையில் காத்திருந்த ஜப்பானியர்களைக் கண்டதும் மோமோபிக்கு அன்டோவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அமெரிக்க அரசாங்கத்தால் ஜப்பானுக்கு வழங்கப்பட்ட கோதுமை உணவுகளை உண்பதற்கு மக்களை ஊக்குவிக்க ஜப்பானிய அரசாங்கம் வழி தேடுவதும் அன்டோவுக்குத் தெரிய வந்தது.

உடனே தன்னுடைய வீட்டின் பின்புறத் தோட்டத்தில் இருக்கும் மரக்குடிலுக்குச் சென்றவர் ஓர் ஆண்டு கழித்து இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் தயாரிப்பு முறையோடு வெளியே வந்தார். அவர் நினைத்தது போலவே இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் அதிவேகமாக பிரபலமடையத் தொடங்கியது. ஜப்பானின் நவீன பொருளாதாரத்துக்கு எழுச்சியை ஊட்டி, மாணவர்களுக்கும், பசியோடு இருந்த தொழிலாளர்களுக்குமான உணவாகவே மாறிவிட்டது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ். மிக விரைவாக உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. பலருடைய சுவைக்கும் பொருந்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கக் கூடிய உணவாக இந்த இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பார்க்கப்பட்டது.

பலவிதமான சுவைகளில் நூடுல்ஸ்!

தாய்லாந்தில் காய்கறிகளின் கலவையுடன் கூடிய சுவையில் க்ரீன் கர்ரி நூடுல்ஸ் மிகவும் பிரபலமானது.

மெக்ஸிகோவில் தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய், கொத்துமல்லி, எலுமிச்சை சாறு கலந்த சால்சா ரெசிபி மிகவும் பிரபலம்.

ப்பானுக்குச் சென்றால் கோழி இறைச்சியும் உருளைக்கிழங்கு வறுவலும் கலந்த நூடுல்ஸை ருசிக்கலாம்.

பாகிஸ்தானில் பீட்சா சுவையிலான நூடுல்சஸ் மிகப் பிரபலம்.

மெரிக்காவில் நூடுல்ஸ்களில் தண்ணீரை கலந்து மாவாக அரைத்து பீட்சாவுக்கான தற்காலிக அடித்தளமாகப் பயன்படுத்துவர். நொறுக்கப்பட்ட நூடுஸ்ஸைப் பயன்படுத்தி சாண்ட்விச் செய்வர்.

ப்பானில் சாப்ஸ்டிக்ஸ் மூலம் நூடுல்ஸ் சாப்பிடுகிறீர்கள் என்றால் நன்றாக சப்தம் வரலாம். நூடுல்ஸ் ருசியாக இருக்கிறது என்று அர்த்தம்.

சீனாவில் நூடுல்ஸ் என்பது நீண்ட ஆயுட்காலத்தைக் குறிக்கிறது. நீளமான நூடுல்ஸ் இருந்தால் சீன பாரம்பரியப்படி நீண்ட ஆயுள் இருக்கிறது என்று அர்த்தம்.

மிக நீளமான நூடுல்ஸ் வறுக்கப்பட்டோ அல்லது வேக வைக்கப்பட்டோ பெரும்பாலும் சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது கிடைக்கும்.

கொரியாவில் ஓக் மரக் கொட்டையிலிருந்து நூடுல்ஸ் கோதுமை மாவுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

நூடுல்ஸ் என்ற வார்த்தை ஜெர்மன் மொழியைச் சேர்ந்தது. நூடுல்ஸ் என்ற லத்தீன் மொழி சொல்லின் பொருள் ‘முடிச்சு.’

சிறுதானிய உணவுகளுள் கம்பு, சோளம், கேழ்வரகு, தினண, சாமை, குதிரைவாலி போன்றவைகளை வைத்து தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உடலுக்கு மிகவும் நல்லது. ராகி நூடுல்ஸ், சிகப்பரிசி நூடுல்ஸ், குதிரைவாலி நூடுல்ஸ் கொண்டு நூடுல்ஸை வெஜிடபிள் நூடுல்ஸ் ஆக தயாரித்து சாப்பிட சத்து தாராளமாக இருக்கும். உடலுக்கு கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com