Idli Pakoda Recipe
Idli Pakoda Recipe

இட்லி பக்கோடா: மாலை நேர சூப்பர் ஸ்நாக்ஸ்!

Published on

வீட்டில் இட்லி மீந்து விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பும் நபரா நீங்கள்? இனி கவலை வேண்டாம். அதை எளிதாக பகோடா செய்து மாலை நேர ஸ்நாக்ஸாக குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம். இதன் சுவை நன்றாக இருக்கும். டீயுடன் சேர்த்து சாப்பிட நல்ல காம்பினேஷன். 

தேவையான பொருட்கள்: 

இட்லி - 4

வெங்காயம் - 2

சோம்பு - ½ ஸ்பூன் 

கொத்தமல்லி தழை - சிறிதளவு

மிளகாய் பொடி - 1 ஸ்பூன் 

மஞ்சள் பொடி - ½ ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - சிறிதளவு

கடலை மாவு - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

முதலில் மீந்து போன இட்லியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இஞ்சி, சோம்பு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். 

இதைத் தொடர்ந்து உப்பு மற்றும் கடலை மாவையும் அதில் சேர்த்து பிசையவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலந்து விடவும். 

பின்னர் ஒரு கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி, கலந்து வைத்துள்ள மாவை பக்கோடா போல எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்தால், சுவையான இட்லி பக்கோடா தயார். 

logo
Kalki Online
kalkionline.com