சுவையான ஜாமுக்கு 'ஜாம் ஜாம்' டிப்ஸ்கள்!
இப்போதெல்லாம் குழந்தைகள் டிஃபனுக்கு தொட்டுக்கொள்ள ஜாம் கேட்கிறார்கள். அந்தவகையில் பலரும் வீட்டிலேயே ஜாம் செய்கிறார்கள். அவ்வாறு ஜாம் செய்வதற்கான சில டிப்ஸ்களைப் பற்றி இங்கே காணலாம்.
* ஜாம் செய்வதற்கு பழுத்த பழங்களை பயன்படுத்த வேண்டும். பழக்கூழை (ஜாம்) நன்கு கொதிக்க விட வேண்டும். அப்பொழுதுதான் ஜாம் புளிக்காமல் இனிப்பாக இருக்கும்.
* ஜாம் செய்யும் போது சர்க்கரை சரியான அளவில் இருக்க வேண்டும். சர்க்கரை அளவு குறைந்தால் சுவை குறைந்து விடும். சர்க்கரை அளவு கூடினால் ஜாம் கெட்டி ஆகிவிடும்.
* ஜாம் செய்யும் பொழுது, அரை ஸ்பூன் கிளிசரின் சேர்த்தால், சர்க்கரை அளவை குறைக்கலாம்.
* ஜாம் கெட்டி ஆகிவிட்டால், பாத்திரத்தோடு சுடுநீரில் சிறிது நேரம் வைத்திருந்தால், இளகி வந்துவிடும்.
* ஜாமில் ஒரு ஸ்பூன் இஞ்சிச்சாறு கலந்து விட்டால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
* ஜாம் செய்யும் பொழுது சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால், பழங்கள் நன்கு மசிந்து விடும்.
* ஜாம் மிஞ்சிப் போனால் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்து குளிர்ந்த நீரை கலந்தால் சுவையான கூல்டிரிங்ஸ் தயார்.