சமையலுக்கு மட்டுமா? அழகுக்கும்தான் உருளைக்கிழங்கு!

சமையலுக்கு மட்டுமா? அழகுக்கும்தான் உருளைக்கிழங்கு!

சமையலுக்கு மட்டுமா? அழகுக்கும்தான் உருளைக்கிழங்கு! உருளைக்கிழங்கை கொண்டு சருமத்திற்கு எப்படி எல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்றும், அதனால் சருமத்தின் அழகு எவ்வாறு அதிகரிக்கும் என்றும் பார்க்கலாம்.

பொலிவான சருமத்தை பெற

உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறினை சம அளவில் எடுத்து அதில் சிறிது தேன் சேர்த்து, சருமத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவினால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி சருமம் பொலிவோடு இருக்கும்.

வறட்சியான சருமம் நீங்க

சருமத்தில் உள்ள அதிகப்படியான வறட்சியைப் போக்கி அழகை அதிகரிக்க வேண்டுமானால், வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, அதில் இரண்டு டீஸ்பூன் பால்பவுடர் மற்றும் ரெண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி கால் மணி நேரம் ஊற வைத்து, கழுவ வேண்டும்.

சரும அழுக்குகளை நீக்க

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்காமல் அரைத்து, பின் அதில் ஒரு முட்டை மற்றும் சிறிது தயிர் சேர்த்து, மீண்டும் நன்கு கலந்து சருமத்தில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

இளமை தோற்றத்தை தக்க வைக்க

உருளைக்கிழங்கு அரைத்து அதில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சாஸ் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முகப்பரு தழும்புகளை மறைக்க

எலுமிச்சை சாறு உருளைக்கிழங்கு சாறு மற்றும் முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து அதனை சருமத்தில் தடவி நன்றாக உலர வைத்து முதலில் வெதுவெதுப்பான நீரில் அலசி, பின்பு குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் மாய்ஸ்ரைசர்  தடவ வேண்டும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.

கண்களின் சோர்வை நீக்க

உருளைக்கிழங்கு துண்டுகளை பிரிட்ஜ்ஜில் முப்பது நிமிடம் வைத்து பின்னர் அதனை கண்களின் மேல் வைக்க வேண்டும். இதனை கண்கள் சோர்வுடன் இருக்கும்போது செய்தால் கண்களின் சோர்வானது உடனே நீங்கும். கண்களுக்குக் கீழ் காணப்படும் கருவளையத்தையும் நீக்கும்.

சரும சுருக்கங்களைப் போக்க

தினமும் உருளைக்கிழங்கு சாற்றினை சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் சரும சுருக்கங்கள் மட்டுமின்றி முகப்பரு சரும நிறம் மாற்றம் போன்ற அனைத்தும் நீங்கிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com