குழல் வடை (காரம்)

குழல் வடை (காரம்)

தேவையான பொருட்கள்:

ச்சரிசி - 1 தம்ளர், பயத்தம் பருப்பு - 1 தம்ளர், மிளகாய் வற்றல் – 6,  பெருங்காயம் – சிறுகட்டி, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - 4 கொத்து, பச்சை கொத்து மல்லித் தழை கொஞ்சம். எண்ணெய் ரிபைன்ட் ஆயில் தேவையான அளவு.

சட்னிக்கு:

தேங்காய் மூடி – 1,  பச்சை மிளகாய் - சிறிது.

செய்முறை:

ரிசி, பயத்தம் பருப்பு இரண்டையும் நன்கு ஊறவிடவும். கல் அரித்துப் போட்டு, மிளகாய், காயம், உப்பு. கறிவேப்பிலை இவற்றையும் சேர்த்து எல்லாவற்றையும் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் நன்கு நைஸாகத் தண்ணீர் விட்டு அரைக்கவும். மாவு ஊற்றுவது போலவும் நைஸாகவும் இருக்க வேண்டும்.

தேங்காய் மூடி (சுண் உள்ளது) ஒன்று திருவியபின் உள்ள காலியான (கொட்டாங்குச்சி) தை எடுத்துக்கொள்ளவும். கண் மூடியில் (காலியானதில்) ஆணியால் துளை போடவும். இதைக் குழல் வடை தயாரிக்க குழலாக உபயோகிக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து காய்ந்ததும் மாவைக் கரண்டியால் எடுத்து கண் மூடி (துளையுள்ளதில்) எண்ணெய்க்கு நேராகப் பிடித்து ஊற்றவும். எண்ணெயில் முறுக்கை நெளியாகச் சுற்றவும். அதாவது அச்சில் பிழிவதுபோல பருமனாக அது வேகும். வெந்தபின் பொன் கலராக எடுக்கவும்.

- பி.பிரியா, புதுதில்லி - 3.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com