எலும்புகளுக்கு பலம் தரும் சத்தான கறுப்பு உளுந்து களி

எலும்புகளுக்கு பலம் தரும் சத்தான கறுப்பு உளுந்து களி

தேவையானவை :

பச்சரிசி - 1கப்

உடைத்த கறுப்பு உளுந்து - 1/2கப்

கருப்புக்கட்டி - 400 கிராம்

தண்ணீர் - 3 1/2கப்

நல்லெண்ணெய் - 200 மில்லி

சுக்கு தூள் - 2 ஸ்பூன்

செய்முறை :

முதலில் ஒரு வாணலியில் அரிசியையும், உளுந்தையும் சேர்த்து 5 நிமிடம் வறுத்து ஆறவைத்து கொள்ளவும். ஆறிய பின் மிக்ஸியில் நைசாக திரித்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கருப்புக்கட்டியை போட்டு 3 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி ஒரு குக்கரில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். கொதித்ததும் அதில் திரித்து வைத்த மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு மத்து வைத்து கிண்டி கொடுக்கவும்.

பின்னர் நல்லெண்ணெய் சேர்த்து கிண்டவும். சிறிது நேரம் கழித்து சுக்கு தூள் சேர்த்து நன்கு கிண்டவும். களி வெந்து வர 3/4 மணி நேரம் ஆகும். பொறுமையாக பச்சை வாடை தீரும் வரை நன்கு கிண்டி இறக்கவும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட மிகவும் கால்சியம் சத்து நிறைந்தது ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com