
தேவையான பொருள்கள் :
துருவிய வெள்ளைப் பூசணிக்காய் - 1கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 6
பாதாம் - 6
உலர்ந்த திராட்சை - 10
சர்க்கரை - 1/2 கப்
குங்குமப்பூ - சிறிதளவு
ஆரஞ்சு கலர் - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள்- 1/2 டீ ஸ்பூன்
வெள்ளரி விதை - 20
செய்முறை:
வெள்ளைப் பூசணிக்காயை விதைகளையும்,தோலையும் நீக்கி, மெல்லிசாக துருவி குக்கரில் ஒரு விசில் வேக வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், நெய் ஊற்றி முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சையை லேசாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் பூசணி, சர்க்கரை, குங்குமப்பூ, ஆரஞ்ச் கலர் அனைத்தையும் ஒன்றொன்றாக சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கலவை கெட்டியான பின், நெய் சேர்த்துக் கிளற வேண்டும். நெய் மேலே மிதந்தவுடன் கலவையை அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்த்தூள், நட்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து கடைசியாக வெள்ளரிவிதை தூவி ஒருமுறை கிளறினால், சுவைமிகு காசி அல்வா ரெடி