கவுனி அரிசி கீர்

கவுனி அரிசி கீர்

தேவையான பொருட்கள்; 

1. பால்  4 கப்

2. கவுனி அரிசி  1/2கப்

3. தேங்காய்ப் பால் 2கப்

4. சர்க்கரை 1 1/2கப்

 5. ப்ரிஞ்சி இலை  2

6. பச்சை கற்பூரம் 1 சிட்டிகை

செய்முறை;

கவுனி அரிசியை 3 மணிநேரம் ஊறவிடவும். பின் குக்கரில் 2கப் நீர் சேர்த்து கவுனி அரிசியைப் போட்டு மூடி 4 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் வைத்து இறக்கவும்.

பாலை அடுப்பில் வைத்து பொங்கி வந்ததும், வெந்த கவுனி அரிசி+பிரிஞ்சி இலை சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க விடவும்.

கொதித்ததும் சர்க்கரை சேர்த்து 10நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தேங்காய் பால்+பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து பரிமாறவும்.   

(பி.கு) கவுனிஅரிசி நன்கு குழைய வெந்த பிறகே சர்க்கரை சேர்க்க வேண்டும். இல்லையென்றால் சர்க்கரை சேர்ந்ததும் விறைத்து விடும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com