
நம்மூர் ஆப்பம் போலவே கேரளாவின் இதழ் அப்பம் ஸ்பெஷல் ஆனது. இட்லியைப் போலவே ஆவியில் வேக வைத்து எடுப்பது இதன் சிறப்பு. வெள்ளை வெளேரென மிருதுவாக இந்த அப்பத்தை நான் வெஜ் குருமா, தே பாலுடன், கடலைக் கறியுடனோ சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையானவை:
சீரக சம்பா அரிசி _11/2 கப், தேங்காய் _1,வடித்த அரிசி சோறு-3டேபிள் ஸ்பூன், உப்பு தேவைக்கு.
செய்முறை:
சீரக சம்பா அரிசியை ஊற விட்டு தண்ணீரை வடித்து விட்டு வைக்கவும். தேங்காய் பாலை பிழிந்து வைக்கவும்.பின் மிக்ஸியில் சீரக சம்பா அரிசி ஊறியது, வடித்த சாதம், தேங்காய் பால் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். நன்றாகதோசை மாவை விட சற்று தளர இருக்க வேண்டும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ,அதில் வேக வைப்பதற்கான ஸ்டாண்டை வைக்கவும்.அதன் மேல் குழிவான தட்டைவைக்கவும்.தட்டின் உள்பகுதியில் நெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.நான்கு நிமிடம் கழித்து வெந்த அப்பத்தின் மீது மற்றொரு கரண்டி மாவை ஊற்றி வேக விடவும்.இது வெந்ததும் நெய் தடவி அதன் மேல் ஒரு கரண்டி மாவை ஊற்றி மூடி வைக்கவும். இவ்வாறு ஒவ்வொரு அடுக்காக ஊற்றி தட்டு நிரம்பும் வரை மாவை விட்டு வேக விடவும். கடைசியில் மிதமான தீயில் 10நிமிடம் வேக விட்டு இறக்கவும்.
ஆறிய பிறகு தட்டின் ஓரங்களை நெய்தடவிய கத்தி, அல்லது ஜாரிணி கொண்டு தளர்த்தி, அகலமான தட்டின் மீது கவிழ்க்கவும் இதழ் அப்பம் பாத்திரத்தில் இருந்து எளிதாக வந்து விடும். பின் சாப்பிடும் போது இதழ் இதழாக பிரித்து பரிமாறவும்.சுவையான இதழ் அப்பம் செய்வது எளிது.