கேரளா ஸ்டைல் சுழியம் செய்வது எப்படி

கேரளா ஸ்டைல் சுழியம் செய்வது எப்படி

இது ஒரு பெஸ்ட் ஈவினிங் ஸ்நாக்ஸ். சுட சுட சாப்பிட அமிர்தமா இருக்கும். நம்ம ஊர்ல கடலைப்பருப்பு வச்சு செய்வோம் இந்த சுழியம். கேரளா ஸ்டைல சுழியம் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையானவை :

பச்சைப்பயிறு - ஒரு கப்

வெல்லம் - ஒரு கப்

தேங்காய் துருவல் - அரை கப்

ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்

சுக்கு பொடி - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்

நெய் - இரண்டு ஸ்பூன்

உப்பு - ஒரு சிமிட்டு

மைதா மாவு - ஒரு கப்

செய்முறை :

பச்சைப்பயிறு ஒரு மணி நேரம் நன்கு ஊற விட்டு பிறகு இரண்டு முறை கலைந்து குக்கரில் வைத்து மூன்று விசில் விட்டு வேகவிட்டு எடுக்கவும்.

வாணலியில் ஒரு கப் வெல்லம் பொடி செய்து போட்டு கால் கப் தண்ணீர் விட்டு நன்கு கரைந்ததும் வடிகட்டி கொதிக்க விடவும். பாகுபதம் எதுவும் தேவையில்லை. வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சுக்கு பொடி, ஏலப்பொடி, நெய் 2 ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு துருவிய தேங்காய் துருவல் அரை கப் சேர்த்து நன்கு கிளறவும் . அத்துடன் வேகவைத்து எடுத்து வைத்துள்ள பச்சைப் பயறை கரண்டியால் நன்கு மசித்து பிறகு இந்த வெல்லத்தில் கலந்து கிளறவும். நன்கு கெட்டியாகி வந்ததும் இறக்கி சூடு ஆறியதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது மேல் மாவுக்கு மைதா மாவுடன் ஒரு சிமிட்டு உப்பு சேர்த்து ,ஒரு ஸ்பூன் நெய்யும், தேவையான அளவுக்கு நீரும் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். ரொம்ப கெட்டியாக கரைத்தால் நன்றாக இருக்காது. அதே சமயம் ரொம்ப நீர்க்க கரைத்தால் மெல்லிய கோட்டிங்காக இருக்கும். எனவே பதமாக கரைத்து அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்க சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் சுழியம் தயார்.

குறிப்பு- எண்ணை நன்கு காய்ந்ததும் நான்கு நான்காக போட்டு பொரித்தெடுக்கவும்.

இது கேரளா ஸ்டைல் சுழியம். நம் ஊரில் பச்சைப்பயறுக்கு பதில் கடலைப்பருப்பு வைத்து செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com