தேவையான பொருட்கள் :
வெர்மிசில்லி (சேமியா) - 1 கப்
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய்- 2
துருவிய கேரட் - 1/2 கப்
நறுக்கிய கொத்தமல்லி-சிறிதளவு
சாட் மசாலா -1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நறுக்கிய வெங்காயம்- 1/2 கப்.
செய்முறை:
முதலில் ஒரு பவுளில் வெங்காயம், துருவிய கேரட், தயிர், சேமியா, பச்சைமிளகாய், சாட் மசாலா, நறுக்கிய கொத்தமல்லி , தேவையான உப்பு சேர்த்து வைக்கவும். பின் அடுப்பில் ஏற்றிய இட்லி பானையில் நீர் விட்டு இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி பவுளில் கலந்து வைத்தவற்றை கையில் அப்படியே எடுத்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைக்க வேண்டும்.
இப்போது ஆவியில் வேக வைத்த ஸ்டீம்டு வெர்மிசில்லி நெஸ்ட் ரெடி . இந்த ரெசிபி வேக வைப்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற சட்டுன்னு செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி.
-நளினி ராமச்சந்திரன்