
தேவையான பொருட்கள்
மாம்பழ கூழ் - 2கப்.
ஏலக்காய் தூள் -1/2 டீஸ்பூன்.
சர்க்கரை- 2 கப்.
சோள மாவு -1 கப்.
நெய் -1/4 கப்.
முந்திரி ,பாதாம் - தேவையான அளவு
செய் முறை
ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி, மாம்பழ கூழ் சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தில் சோள மாவில் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
மாம்பழக் கூழ் சூடானதும்,சோள மாவு கலவையே சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.
பின்னர் சர்க்கரை சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை நெய் சேர்த்து கிளறவும்.
இது தயாராக சுமார் 45-50 நிமிடங்கள் ஆகும்.
உடைத்த முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் சேர்த்து மேலும் 10 நிமிடம் தொடர்ந்து கிளறவும்.
வாணலியில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும் அப்பொழுது இறக்கி சூடாக பரிமாறவும்....